வவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் அமைச்சரினால் திறந்துவைப்பு!!

368

 
வவுனியாவில் பொகஸ்வெவ பகுதியில் இன்று (23.12.2016) காலை 9 மணியளவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் புத்தசாசன, நீதி அமைச்சர் விஜயதாச ரஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்குத் திறந்து வைக்கப்பட்டது.

பொகஸ்வெவ பகுதிமக்களின் வேண்டுகொளினையடுத்து இப்பகுதியில் பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்துவைத்ததையடுத்து நாமல்கம பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள விகாரைக்குச் சென்று விகாராதிபதி மற்றும் அப்பகுதி மக்களையும் சந்தித்து அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

பின்னர் மடுக்கந்தை பகுதிக்குச் சென்ற அமைச்சர் அப்பகுதிமக்களின் தேவைகளையும் கேட்டறியும் சந்திப்பு ஒன்றில் பங்குபற்றினர். அதனையடுத்து கொக்குவெளி இராணுவக்குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிக்கும் இயந்திரப்பகுதியினையும் அமைச்சர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

பின்னர் வவுனியா இறம்பைக்குளம் பகுதியிலுள்ள காளிகோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொண்டார். அமைச்சரின் இவ்விஜயத்தின் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், வன்னி மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் கருணதாசா, வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி விஜயமுனி சோமரத்தினா, மற்றும் அரச உயர் அதிகாரிகிள், எனபலரும் கலந்து கொண்டனர்.