வடக்கின் விளை­யாட்டு நட்­சத்­திரமாக யாழ் மகா­ஜனா கல்­லூரி மாணவி அனிதா!!

797

இவ் வரு­டத்­திற்­கான வடக்கு மாகாண விளை­யாட்­டுத்­துறை நட்­சத்­திர விருதை மகா­ஜனா கல்­லூரி மாணவி அனித்தா ஜெக­தீஸ்­வரன் வென்­றெ­டுத்தார்.

யாழ்ப்­பாணம் துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற 42ஆவது தேசிய விளை­யாட்டு விழாவில் பெண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்தல் நிகழ்ச்­சியில் 3.41 மீற்றர் உயரம் தாவி புதிய இலங்கை சாதனையை நிலை­நாட்­டிய அனி­தா அகில இலங்கை பாடா­ச­லைகள் விளை­யாட்டு விழா உட்­பட இன்னும் சில விளை­யாட்டுப் போட்­டி­களில் ஈட்­டிய பெறு­பே­று­களின் அடிப்­ப­டையில் வடக்கு மாகாண விளை­யாட்டு நட்­சத்­திரம் விருதை வென்­றெ­டுத்தார்.

சாவ­கச்­சேரி நக­ர­சபை பொன்­விழா மண்­ட­பத்தில் புதன்­கி­ழமை நடை­பெற்ற ஏழா­வது வடக்கு மாகாண வர்ண இரவு விழாவில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் பி. குரு­கு­ல­ராஜா பிர­தம அதிதியாகக் கலந்­து­கொண்டு விளை­யாட்டு நட்­சத்­திர விருது உட்­பட மற்­றைய பிர­தான விரு­து­களை வழங்­கினார்.

சர்­வ­தேச விளை­யாட்டுப் போட்­டி­களில் இலங்கை அணி­களில் இடம்­பெற்ற 12 பேருக்கு விசேட விருதுகள் வழங்கி கௌர­விக்­கப்­பட்­டனர். அத்­துடன் தேசிய மற்றும் அகில இலங்கை பாட­சா­லைகள் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற சுமார் 300 பேருக்கு வர்ண விருதுகள் வழங்கப்பட்டன.