கொழும்புக்கு இணையாக யாழ்ப்பாணத்தில் உயரமான கட்டடம்!!

463

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள உலகின் உயரமாக கட்டடம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

World Capital Centre திட்டம் இந்த நாட்களில் அனைவரின் அவதானமும் செலுத்தப்பட்ட ஒரு திட்டமாக மாறியுள்ளது.

கொழும்பில் அமைக்க திட்டமிட்டுள்ள இந்த திட்டத்திற்காக 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

117 மாடியிலான இந்த திட்டம் தெற்காசியாவில் நிர்மாணிக்கப்படுகின்ற உயரமான கட்டடமாக பெயரிடப்படவுள்ளது. இந்நிலையில் அது உலகின் மிக உயரமான கட்டடங்களில் 9வது இடத்தை பிடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த கட்டடம் 625 மீட்டர் என இதற்கு முன்னர் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன. எப்படியிருப்பினும் தற்போது இந்த கட்டடம் தொடர்பில் மேலும் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த திட்டத்தை அல் அமான் குழு என்ற நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படுகின்றது. இது மத்திய கிழக்கு நிறுவனம் ஒன்றினை போன்றே தெரிகின்ற நிலையில் அல் அமான் குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் 2001ஆம் ஆண்டு இலங்கையில் இணைந்துக் கொண்ட சர்வதேச வர்த்தன நிறுவனமாகும். அதன் துணைக்களை தற்போது வரையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நிறுவப்பட்டுள்ளது.

கொழும்பு நகரத்தினுள் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த பாரிய கட்டடத்திற்குள் சொகுசு வீடுகள், கண்காட்சிசாலைகள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், மாநாட்டு மண்டபங்கள், பொழுதுபோக்கு இடங்கள்,

5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பொருளாதார மையத்திற்கான போன்றவைகளுக்காக அனைத்து விடங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கும். 2020ஆம் ஆண்டில் இந்த திட்டத்தை நிறைவு செய்வதற்கு அல் அமான் குழு திட்டமிட்டுள்ளது.

World Capital Centre திட்டத்திற்கு மேலதிகமாக மேலும் பாரிய வர்த்தகங்கள் இரண்டிற்கு அல் அமான் குழு திட்டமிட்டுள்ளது. இவற்றில் ஒன்று வடகொழும்பு கடற்கரைக்கு அருகில் நிர்மாணிக்கப்படுகின்ற Aman 101 – Royal Empire திட்டமாகும்.

101 மாடியிலான இந்த திட்டத்தில் பொழுது போக்கு மையங்கள், சொகுசு மாடி வீடுகள், கடைகள் ஆகியவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அல் அமான் குழுவினால் செயற்படுத்தப்படவுள்ள மற்றைய திட்டம் யாழ். குடாநாட்டின் மண்டைதீவில் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ள Aman Royal Island திட்டமாகும்.

அங்கு 5 நட்சத்திர ஹோட்டல் மற்றும் தங்குமிட வசதிகளை கொண்ட சூழல் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. 37 மாடியிலான இந்த திட்டத்திற்கு மண்டைதீவில் 33 ஹெக்டேர் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த கட்டடத்தொகுதியில் விடேச அம்சங்களாக Tower Hotel building, Apartment Complex, Water Park, Water Sports 9 hole Golf course ஆகியவைகள் உள்ளடக்கப்படவுள்ளது.