கடத்தப்பட்ட 118 பேரும் விமானத்திலிருந்து மீட்கப்பட்டனர் : கடத்தல்காரர்கள் கைது!!

265

மோல்டாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் விமானபணியாளர்கள் என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தை கடத்திய கடத்தல்காரர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

118 பேருடன் நடுவானில் கடத்தப்பட்டது லிபிய விமானம் : குண்டு வைத்துத் தகர்ப்பதாக மிரட்டல்!!

லிபியாவின் பயணிகள் விமானம் ஒன்று 118 பயணிகளுடன் பலவந்ததமாக தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் மோல்டா பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை ´விமானக் கடத்தல் நிலைமைக்கு சாத்தியமான´ விடயம் என மோல்டாவின் பிரதமர் அறிவித்துள்ளார்.

குறித்த ஏ320 ஏயாபஸ் லிபியாவிற்குள் அப்ரிகியா விமான நிறுவனத்தின் கீழ் சேவையில் ஈடுபட்டு வருவதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் இரண்டு கடத்தல்காரர்கள் தொடர்புபட்டுள்ள நிலையில், விமானத்தில் குண்டு இருப்பதாக வதந்தியை பரப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், பாதுகாப்புத் தரப்பினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மோல்டா பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து மோல்டா வானூர்தி நிலையத்திற்கு சட்டவிரோத குறுக்கீடு ஏற்பட்டுள்ளதாக மோல்டா சர்வதேச விமான நிலையம் தமது டூவிட்டர் தளத்தில் செய்தி வௌியிட்டுள்ளது.
.