சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசாவின் நத்தார் வாழ்த்துச் செய்தி!!

890

இப் பூவுலகில் வாழும் உயிர்களை பாவங்களில் இருந்து மீட்பதற்கான மீட்பராக, இறைதூதராக கன்னி மரியின் திருவயிற்றில் பிறந்து இந்த உலகிற்கு ஒளியூட்டிய ஜேசுபிரான் பிறப்பு தினமான நத்தார் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்துவை பின்பற்றும் அனைத்து உறவுகளுக்கும் எனது இதயம் கனிந்த நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெரும் மகிழ்வடைகின்றேன் என சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் ஒரு அரசியல் நிர்ணய சூழலை நெருங்கியுள்ள நிலையில் தமிழ் மக்கள் தங்களுக்கான சரியான அங்கீகாரங்களையும் அபிலாசைகளையும் பெற்று வாழக்கூடிய ஒரு அரசியல் அமைப்பை பெற்று சுதந்திரமாக தனித்துவத்துடன் வாழ வழிபிறக்க வேண்டுமெனவும், இவ்வருடம் ஏற்பட்டுள்ள ஏற்படப்போகின்ற கடும் வறட்சியிலும் பொருளாதார நெருக்கடிகளிலும் இருந்து எமது மக்கள் மீண்டுவர அருள் புரிய வேண்டுமென இந்நேரத்தில் அனைவரும் பிராத்திப்பதுடன், அனைத்து மதங்களும் போதிக்கின்ற அன்பு என்னும் உன்னத வழியில் சென்று இன மத பேதங்களை கடந்து வேற்றுமைகளில் ஒற்றுமை கண்டு ஒருவருக்கொருவர் அன்புசெலுத்தி குரோதங்களை மறந்து அனைவரும் இயேசுபிரானின் பிறப்பை அர்த்தப்படுத்த உறுதி எடுத்துக்கொள்வோம்.