திருமலையில் பிறந்த விசித்திர கன்றுக்குட்டி!!

522

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நடுத்தீவு பகுதியில் நேற்று முந்தினம் (24.12) ஒரு பசு விசித்திரமான கன்று ஒன்றை பிரசவித்துள்ளது.

கிண்ணியா நடுத்தீவு பகுதியில் உள்ள நஜிம் முகமட் சுகைப் என்பவருக்கு சொந்தமான பசுவே இவ்வாறு விசித்திரமான கன்றை பிரசவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தக் கன்றுக்கு ஏழு கால்களும் இரண்டு உடம்பும் காணப்படுகின்றது. இதைப்பார்க்கும் போது இரண்டு கன்றுகளுக்கு ஒரு தலை இருப்பதைப் போல் காணப்படுகின்றது.

எனினும் இக்கன்று பிரசவித்து சுமார் ஒரு மணித்தியாலத்திற்குப் பின் இறந்து விட்டது.