கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பறவூர் பகுதியை சேர்ந்தவர் சுதீர். கூலி தொழிலாளி. இவரது குடும்பம் வறுமையில் வாடியது.
இதை பயன்படுத்தி அதே பகுதியை சேர்ந்த பெண் புரோக்கர் கதீஜா என்பவர் சுதீரிடம் அவரது வறுமை நீங்க வேண்டும் என்றால் அவரது மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தும்படி கூறினார்.
இதைத்தொடர்ந்து சுதீர் 10 ஆயிரம் ரூபா பெற்றுக் கொண்டு தனது 13 வயது மகளை கதீஜாவிடம் விற்று விட்டார். அந்த சிறுமியை ஒரு அறையில் அடைத்து வைத்து கதீஜா விபசாரத்தில் ஈடுபடுத்தினார். கதிஜாவுக்கு உடந்தையாக வில்சன், ஜவகர், சுலேத் ஆகியோர் இருந்தனர்.
10 நாட்கள் அறையில் அடைக்கப்பட்ட அந்த சிறுமியை பலர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த கொடுமையில் இருந்து தப்பிய அந்த சிறுமி கொச்சி போலீசில் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி புகார் செய்தார். இதைத் தொடர்ந்து பொலிஸார் சுதீர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்றது. இந்த வழக்கு கொச்சி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஜீத்குமார் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில் சுதீருக்கு 7 வருடம் சிறைத் தண்டனையும், கதீஜா, வில்சன், ஜவகர், சுலேத் ஆகியோருக்கு 10 வருட சிறைத் தண்டனையும் விதித்தார்.