வவுனியா வீரபுரத்தில் இடம்பெற்ற தொழிற்பயிற்சி விழிப்பூட்டல் வீதி நாடகம்!!

750

 
செட்டிகுளம் வீரபுரத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க ஆர்.டி.எப் (RDF) நிறுவனத்தின் ஏற்பாட்டில் தொழிற்பயிற்சி தொடர்பிலான விழிப்பூட்டல் நாடகம் இன்று (26.12.2016) இடம்பெற்றது.

நவீனத்துவமடைந்துவரும் இன்றைய உலகில் வேலையில்லா பிரச்சினையை குறைத்து கொள்ளவும், இளைஞர் யுவதிகளை எதிர்கால உலகிற்கு செயற்திறன் மிக்கவர்களாக மாற்றியமைத்து கொள்வதற்காகவும், அவர்களின் எதிர்காலத்தை வளம்மிக்கதாக மாற்றிக்கொள்வதற்காகவும் இவ்வாறான ஒரு தொழிற்பயிற்சி மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பில் கிராமப்புற மக்களையும் இளைஞர் யுவதிகளையும் தெளிவூட்டும் வகையிலும்,

நேரடியாக மக்களை அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று விழிப்பூட்டுவதற்காகவும் இவ்வாறான வீதி நாடக விழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் தெரிவித்தார்.

அத்துடன் கிராமங்கள் தோறும் தொடர்ச்சியாக இவ்வாறான விழிப்பூட்டல் நாடகங்கள் ஆர்.டி.எப் (RDF) நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.