டெல்லி மாணவி வழக்கு : தீர்ப்பைக் கேட்டு கதறியழுத குற்றவாளிகள்!!

359

delhi

டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கொலை, பாலியல் பலாத்காரம், கொள்ளை, இயற்கைக்கு மாறான முறையில் சித்திரவதை உள்ளிட்ட 14 பிரிவுகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி யோகேஷ் கண்ணா தீர்ப்பு வழங்கிய பின்னர் குற்றவாளிகள் முகேஷ், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் சிங் தாகூர் ஆகிய 4 பேரும் தீர்ப்பை கேட்டு கண்ணீர் விட்டு அழுதனர்.

நீதிபதியிடம் ´Sir ji, Sir ji” என்று கெஞ்சியுள்ளனர்.

இதேவேளை குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டமை மகிழ்ச்சி அளிப்பதாக பலியான மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

வழக்கை நீதிமன்றத்தில் அமர்ந்து பார்த்த மாணவியின் பெற்றோர் இந்த தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. எங்களுக்கு நீதி கிடைத்துள்ளது.

எனது மகள் குற்றவாளிகள் அனைவரையும் தீயிட்டு கொளுத்தவேண்டுமென கூறியிருந்தாள். ஆனால் அவர்கள் இந்த குற்றத்தை செய்ததற்கு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றனர்.

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

இதனால் இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்ததை அடுத்து, டெல்லியில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு கடந்த ஜனவரியில் வழக்கின் விசாரணை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.