முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க காலமானார்!!

926

இலங்கையின் முன்னாள் பிரதமரும் மூத்த அரசியல்வாதியுமான ரத்னசிறி விக்ரமநாயக்க சற்று முன்னர் காலமானார்.

இவர் தனது 83வது வயதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இயற்கை எய்தியுள்ளார்.

1933ம் ஆண்டு மே 5ம் திகதி பிறந்த இவர், நீண்டகாலம் இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தி வந்துள்ளார். முதன்முதலில் 1970ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் பிரதி நீதி அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டார்.

மேலும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான இவர் 2000மாம் ஆண்டு, முதன் முதலில் நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

இதற்கமைய 2000மாம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கம் 2001ம் ஆண்டு டிசம்பர் வரை அவர் பிரதமராக பதவி வகித்தார்.

இதனையடுத்து 2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலும் அவருக்கு இரண்டாவது முறையாகவும் பிரதமராகும் வாய்ப்பு கிட்டியது. மேலும் அவர் 2010ம் ஆண்டு வரை அப் பதவியில் இருந்தார்.

அத்துடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் விதுர விக்ரமநாயக்க இவரது புதல்வராகும்.