வன்னித் தமிழனின் சிறப்புக் குணம் வெளிப்பட்ட நிகழ்வு இதோ..
இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கண்டெடுத்து ஒப்படைத்த நல்லெண்ணம் கொண்ட மனிதரை பாராட்டுங்கள், பகிருங்கள்..
நேற்றை தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து திருமலைக்கு திரும்பிகொண்டிருந்த போது வவுனியாவில் வைத்து எனது அம்மாவின் கைப்பை தவறவிடப்பட்டிருந்தது. ஆயினும் திருமலை திரும்பிய பின்னரே எமக்கு தெரிய வந்தது..
அந்த கைப்பை 100,000 ஒரு இலட்சத்திற்கும் அதிக பெறுமதியை கொண்ட பொருட்களை தாங்கியிருந்தது. அதுவரை சந்தோசமாக இருந்த தருணங்கள் மாறி முழுவதும் குழப்பமான நிலமையில் என்ன செய்வது என தெரியாமல் குழம்பியிருந்த நேரத்தில் அந்த பைக்குள் இருந்த என் அம்மாவின் தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டேன்.
அந்த அழைப்பிற்கு பதில் அளித்தார் அந்த ஒரு மனிதர். அவர் பெயர் சிவனேசன் மாங்குளம் ஒலுமடு எனும் இடத்தை சேர்ந்தவர். அவர் தன்னிடம்தான் குறித்த பை இருப்பதாகவும், உரிய அடையாளங்களுடன் தன்னிடம் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் கூறினார்.
இன்று காலையில் திருகோணமலையில் இருந்து புறப்பட்ட நேரம் முதல் என்னுடன் எங்கு வரவேண்டும் என்பது தொடர்பாக கதைத்துகொண்டிருந்ததுடன். எனக்காக இன்று வேலைக்கும் போகாமல் காத்திருந்து என்னிடம் குறித்த பையை கையளித்தார்..
இன்று கிடைக்கும் பொருளை அபகரிக்கு நிலையில் வாழும் மனிதர்களுக்கு மத்தியில் ஒரு நல்ல மனிதரை காண கிடைத்தது. இன்று அவருடன் கழித்த நேரங்கள் மிகவும் சந்தோசமானது. அந்த மனிதரின் தோற்றமும், குணமும், என்னுள் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது…
ஏழையின் சிரிப்பில் இறைவனை இன்று கண்டேன்.
இவரை வாழ்த்த வேண்டியது எம் கடமை.. முடிந்தவர்கள் பகிருங்கள், தெரிந்தவர்கள் நேரில் வாழ்த்துங்கள்..
இது ஒரு முகப்புத்தக செய்தி..








