கார் 175 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழப்பு!!

454

ஹல்துமுல்லை பத்கொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கார் ஒன்று வேகக்கட்டுப்பாடை இழந்து 175 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. விபத்து சம்பவிக்கும் போது குறித்த காரில் 5 பேர் பயணித்துள்ளனர்.

மேலும் விபத்தில் காயமடைந்த 4 பேர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.