49 நாட்களில் உலகைச் சுற்றி சாதனை படைத்த நபர்!!

337

பிரான்சை சேர்ந்த தாமஸ் கோவில்லோ என்பவர் 49 நாட்களில் படகு மூலம் உலகைச் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.

பிரான்சை சேர்ந்தவர் தாமஸ் கோவில்லே (48). இவர் கடல் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் மிகுந்தவர் என கூறப்படுகிறது. இவர் படகு மூலம் உலகை சுற்றி வர திட்ட மிட்டுள்ளார்.

அதற்காக 31 மீட்டர் நீள படகில் தனி ஆளாக பயணம் மேற்கொண்டுள்ளார்.

தனது பயணத்தை முடித்த அவர் 49 நாட்களில் மேற்கு பிரான்சில் உள்ள பிரெஸ்ட் துறை முகத்துக்கு மீண்டும் திரும்பினார்.

அங்கு திரும்பிய அவர் தன்னுடைய சாதனையை நினைத்து தன்னை அறியாமல் கண்ணீர் விட்ட சம்பவம் அங்கிருந்தவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் 49 நாட்கள், 3 மணி 7 நிமிடம் மற்றும் 38 வினாடிகளில் உலகை சுற்றி முடித்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 2008 ஆம் ஆண்டு பிரான்சிஸ் ஜோயன் என்ற பிரான்ஸ்காரர் 57 நாட்கள் மற்றும் 13 மணி நேரத்தில் படகில் உலகை சுற்றி வந்தார்.

தற்போது அவரை விட 8 நாட்கள் முன்னதாகவே உலகை சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து கோவில்லே, கூறும் போது, இச்சாதனை படைக்க தான் 10 ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன் என்றும் பிரான்சிஸ் ஜோயனின் சாதனையை முறியடிக்க கோவில்லே 5 முறை முயற்சி செய்து தற்போது தான் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.