ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் குஜராத்- ஒடிசா அணிகள் மோதி வருகின்றன. இதில் குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர் சமித் கோஹெல் 359 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உலக சாதனை படைத்துள்ளார்.
உலகில் முதல்நிலைப் போட்டிகளில், துவக்க ஆட்டக்காரர் ஒருவரின் அதிகப்பட்ச ரன் இதுதான். இதன்மூலம் 117 ஆண்டு சாதனையை அவர் முறியடித்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பாபி எபெல் என்பவர் கடந்த 1899-ஆம் ஆண்டு 357 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அதேபோல், உலக அளவில், முதல் நிலைப் போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் குவித்த நான்காவது வீரர் என்ற பெருமையையும் சமித் பெற்றுள்ளார்.






