நான்கு வருட காலமாக தன்னை காதலித்து வந்த காதலி காதலை முறித்துக் கொண்டு வேறொரு இளைஞரை திருமணம் செய்துகொள்ள முற்பட்டதால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று மாத்தளை மகாவெல பொலிஸ் பிரிவில் நிகழ்ந்துள்ளது.
யுவதியை கொலை செய்த இளைஞன் விஷமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாத்தளை பதில் நீதிவான் இளைஞனை எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.






