பிரான்சில் ஆண் சடலம் ஒன்று நான்கு துண்டாக வெட்டப்பட்டு மூன்று சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Toulon பகுதியிலே சடல துண்டுகள் அடைக்கப்பட்டிருந்த மூன்று சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் அளித்த தகவலை அடுத்து பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.
பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கண்டெடுக்கப்பட்ட சில நிமிடத்திற்கு முன்னரே மூன்று சூட்கேசும் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், 24 மணிநேரத்திற்குள்ளே இந்த கொலை நடந்திருக்கிறது. பின்னர், பிணம் வாகனம் மூலம் இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உயிரிழந்தவருக்கு 20 முதல் 30 வயதிற்குள் இருக்கும்.
தலையில் பலமாக தாக்கப்பட்டதின் மூலம் அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், உடல் பாகங்களில் கத்தியால் வெடப்ட்ட தடயமும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், கைப்பற்றப்பட்டுள்ள உடல் பாகங்கள் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த நபரின் அடையாளம் குறித்து பொலிசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.






