நியூஸிலாந்து தீவிபத்தில் மூவரை பலிகொடுத்த இலங்கையர் : 75 ஆயிரம் டொலர் நிதி சேகரிப்பு!!

588

நியூஸிலாந்து ஒக்லேன்ட்டில் தனது மனைவி, மகன், மனைவியின் தாய் என மூன்று பேரை பறிகொடுத்த இலங்கையர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

கடந்த 22ஆம் திகதியன்று அதிகாலையில் அவரின் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தின் போது மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 47வயதான கைலேசன் தனபாலசிங்கம் என்ற இலங்கையர் 40 வீதமான தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சில நேரங்களில் அவர் கண்விழித்துபார்ப்பதாக அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த தீவிபத்து சம்பவத்தின்போது கைலேசனின் 11வயது மகள் மாத்திரமே உயிர்தப்பியுள்ளார்.

அவரின் அம்மா, தம்பி, அம்மம்மா ஆகியோர் தீக்கு பலியாகினர். அவர்களின் இறுதிக்கிரியைகள் அடுத்த வாரத்தில் இடம்பெறவுள்ளன.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட கைலேசனின் குடும்பத்துக்காக 75 ஆயிரம் டொலர் நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. அது உயிழந்த மூவரின் இறுதிக்கிரியைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.