வவுனியாவில் இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மூன்றாம் ஆண்டு நினைவுப் பகிர்வு!!

644

 
வவுனியாவில் நேற்று (30.12.2016) இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மூன்றாம் ஆண்டு நினைவு பகிர்வை முன்னிட்டு ‘தண்ணீர் அனைத்து உயிர்களின் அடிப்படை உரிமை அது விற்பனை பொருளல்ல’ என்ற தொனிப்பொருளில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு கருத்தப்பகிர்வு நடைபெற்றது.

சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் எதிர்காலத்தில் தண்ணீரைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு மற்றும் பல்தேசிய கம்பனிகள் தண்ணீரை விற்பனை பொருளாக மாற்றுவது, விவசாய நிலங்கள் மற்றும் குளங்களை பாதுகாக்க வேண்டிய தேவைகள் குறித்தும் கருத்துரைகள் நடைபெற்றது.

இலங்கையின் இயற்கை வேளான்மையும் நீர் மேலான்மையும் என்ற தலைப்பில் இலங்கையின் இயற்கை வேளான் விஞ்ஞானி கலாநிதி லயனல் வீரக்கோன், தண்ணீர் அனைத்து உயிர்களின் அடிப்படை உரிமை என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன், நவ காலநித்துவத்தில் இலங்கையின் தண்ணீர் கொள்கை என்ற தலைப்பில் மக்கள் திட்ட ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் உபாலி லிவுலியதா, யாழ் குடாநாட்டின் குடிநீர் அரசியல் என்ற தலைப்பில் ஊடகவியலாளர் அ.ஜெயச்சந்திரன் மற்றும் வவுனியாவில் நிலத்தடி நீர் பாதிப்புக்கள் குறித்து சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் பேச்சாளர் சி.சதீஸ்குமார் ஆகியோர் உரையாற்றினர்.