நிச்சயம் மீண்டும் வருவேன் : ஸ்ரீசாந்தின் அதீத நம்பிக்கை!!

329

sreesanthஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஸ்ரீசாந்துக்கு ஆயுள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டது.
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சண்டிலா ஆகியோரை டெல்லி பொலிசார் கைது செய்யப்பட்டனர்.

தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள இவர்கள் மீது கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்புக்குழு தலைமை அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார்.

இதில் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால் இந்திய கிரிக்கெட் சபையின் ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்று டெல்லியில் கூடி அறிக்கை குறித்து விவாதித்தனர்.

கூட்டத்தில் சர்ச்சையில் சிக்கிய வீரர்களும் ஆஜராகினர் அதிகாரிகள் குழுவினர் ஆலோசனை நடத்தி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் மற்றும் அங்கித் சவானுக்கு ஆயுள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.

மேலும் சர்ச்சையில் சிக்கிய அமித் சிங்கிற்கு 5 ஆண்டு தடையும், சித்தார்த் திரிவேதிக்கு 1 ஆண்டு தடையும் விதிக்கப்பட்டன. மற்றொரு வீரரான ஹர்மீத்சிங்கிற்கு எதிராக ஆதாரம் இல்லாததால் அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இடம்பெற்ற அதிகாரிகள் அனைவரும் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர்.
எல்லாமே நன்றாக சென்றது நான் என்னுடைய நியாயங்களை எடுத்து கூறினேன்.

நான் சிறு வயது முதலே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன். அதனால் கிரிக்கெட்டை நான் ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் நான் இந்திய நீதித்துறை மீதும் பிசிசிஐ மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன்.

நிச்சயமாக இந்த சர்ச்சையில் இருந்து சுத்தமாக வெளிவருவேன். அதற்காக உறுதியான முயற்சிகள் எடுத்து வருவதாகவும் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.