வவுனியா கனகராஜன்குளம் சிவில் பாதுகாப்புக்குழுவின் ஏற்பாட்டில் புதுவருடத்தை முன்னிட்டு பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள், வறியமாணவர்கள். தாய் தந்தையை இழந்த பிள்ளைகள் எனத் தெரிவு செய்யப்பட்டு உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று காலை 10.30 மணியளவில் வவுனியா கனகராஜன்குளம் மகாவித்தியாலயத்தில் கனகராஜன்குளம் சிவில் பாதுகாப்புக்குழுத் தலைவரும் பண்டிதமணி கணபதிப்பிள்ளை வித்தியலாய அதிபருமான திரு.சுபாஸ் தலைமையில் கனகராஜன்குளம் கலா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலா மன்ற மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தர், வைத்தியர், கனகராஜன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி, சிவில் பாதுகாப்புக்குழு பொறுப்பதிகாரி, பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம், என கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.
நிதி அனுசரணையினை பயஸ் விஜயபாலன் மரியாம்பிள்ளை வழங்கியிருந்தார். பெருமளவானவர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.















