மாணவிகளின் உயிரையும் மானத்தையும் பாதுகாத்த அதிபர்!!

573

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தில் வெளிநாட்டு பல்கலைகழக மாணவிகள் இருவரின் உயிரையும் மானத்தையும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸ் பாதுகாத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நேற்றிரவு குறித்த புகையிரதத்தில் மட்டக்களப்பில் தொண்டர் பணியாற்றுவதற்காக ஒருநாட்டின் பல்கலைகழக மாணவிகள் இருவர் வருகை தந்துள்ளனர். அவர்களை 6 இளைஞர்கள் கத்திமுனையில் சுற்றிவளைத்து சிறைப்பிடித்துக்கொண்டிருந்துள்ளனர். சுமார் 3 மணித்தியாலங்களாக இம்மாணவிகள் குறித்த குண்டர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு ஜீவமரணப்போராட்டத்தில் இருந்துள்ளனர்.

புகையிரதத்தில் பயணம் செய்த ஏனைய பயணிகளிடம் குறித்த யுவதிகள் உதவிகோரிய போதும் யாரும் உதவ முன்வரவில்லை. இத்தகவல் அதே புகையிரதத்தில் பயணித்த மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்சின் கவனத்திற்கு எட்டியுள்ளது. அதனையடுத்து உடனடியாக அரசாங்க அதிபர் புகையிரத திணைக்கள பணிப்பாளர் நாயகமான பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.



அரை மணிநேரத்தில் சடுதியாக பணிப்பாளர் நாயகம் எடுத்த நடவடிக்கை காரணமாக புகையிரதம் நிறுத்தப்பட்டு பொலஸார் வரவழகைகப்பட்டு சம்பத்தப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன் யுவதிகள் பாதுகாப்பாக இரண்டாம் வகுப்புக்கு மாற்றப்பட்டு மட்டக்களப்பில் அவர்கள் செல்லும் இடத்திற்கு பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இத்தகவலை இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவமொன்றின்போது அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.அரசாங்க அதிகாரிகள் திறமையாக செயற்படுகின்றபோது உயிர்களைக்கூட பாதுகாக்கலாம் என்பது தெளிவான விடயம்.