20 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவியுடன் பேசிய கணவன்!!

490

ஒரே வீட்டில் கடந்த 20 வருடங்களாக ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளாமல் தம்பதியினர் வாழ்ந்துள்ளனர் என்றால் அதனை நம்ப முடியுமா?இப்படியான கதைகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் அப்படியான சம்பவம் நடந்துள்ளதை அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாகியுள்ளது.இந்த தம்பதி ஜப்பானில் வசித்து வருகின்றனர்.ஒட்டாஹூ நட்டயாமா கடந்த 20 வருடங்களுக்கு பின்னர் தனது மனைவியுடன் பேசியதை அடுத்தே இந்த தகவல் வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்ட இவர்கள் சில குழந்தைகள் பிறக்கும் வரை மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர்.திடீரென ஒரு நாள் ஏற்பட்ட மனகசப்பால் நட்டயாமா மனைவியுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார். எனினும் பிள்ளைகளுக்கு எந்த குறையும் வைக்கவில்லை.

மனைவியும் கடந்த 20 ஆண்டுகளாக கணவருடன் பேசுவதை தவிர்த்துக்கொண்டார். ஒரே வீட்டில் வாழும் தமது தாயும் தந்தையும் பேசிக்கொள்வதை பிள்ளைகள் ஒரு நாள் கூட பார்த்ததில்லை.தனது மனைவி தனது பிள்ளைகளை அதிகமாக நேசிப்பதை பார்த்து தான் கவலையடைந்ததாக நட்டயாமா கூறியுள்ளார்.



இதனால் ஏற்பட்ட பொறாமையால், மனைவியுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் தனது செயல் குறித்து தற்போது வருந்துவதாகவும் இனிமேல் அப்படி நடக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.