வவுனியாவில் தாயும் மகனும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!

1233

 
வவுனியா ஒமந்தை பண்றிக்கெய்தகுளத்திலிருந்து இன்று (02.01.2016) காலை 11 மணியளவில் தாயும் மகனும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்தே, இளம் தாய் ஒருவரும் அவரது 7 வயது மகனும் இன்று இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கிராம அலுவலர் அலுவலகத்திற்கு சென்றிருந்த, உயிரிழந்த பெண்ணின் மாமியார் வீட்டிற்கு வந்து பார்த்த போது தாயும் மகனும் வீட்டில் இல்லாத நிலையில் அவர்களை தேடியுள்ளனர்.

இதன்போதே அவர்கள் இருவரும் சடலங்களாக கிணற்றில் காணப்படுவதை தேடியவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரின் உதவியுடன் குறித்த தாயும் மகனும் வீட்டின் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

30 வயதான சதீஸ்வரன் சுதாசினி மற்றும் 7 வயது அவரது மகன் சதீஸ்வரன் டினோஸன் என்பவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.