வவுனியாவில் இன்று (02.01.2016) மாலை 5 மணியளவில் சிறுமி ஒருவரை கடத்தும் முயற்சி வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,
சமூகவலைத்தளம் மூலமாக தொடர்பினை மட்டக்களப்பிலிருந்து ஏற்படுத்திய இளைஞர் ஒருவர் சுந்தரபுரம் பகுதியிலுள்ள 16 வயது சிறுமியுடன் தொடர்பினை ஏற்படுத்தி பல காலமாக பழகிவந்துள்ளார்
தொடர்ந்து அச் சிறுமியை இன்று (02.01.2016) மாலை வவுனியா பேரூந்து நிலையத்திற்கு வருமாறு குறித்த இளைஞன் அழைத்துள்ளார். குறித்த சிறுமியும் இளைஞனின் வார்த்தைக்கு இணங்கி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உடுதுணிகளை எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.
சிறுமி வீட்டிலிருந்து வெளியேறுவதாக தந்தைக்கு அயலவர்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. தந்தை உடனடியாக வவுனியா வர்த்தக நிலையத்தில் பணபுரியும் உறவினருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
பேரூந்து நிலையத்தில் சிறுமி பேரூந்தில் வந்து இறங்கியதும் குறித்த இளைஞர் பேரூந்து தரிப்பிடத்தில் சிறுமியை அழைத்துச் செல்லத் தயாராக இருந்ததையடுத்து காத்திருந்த உறவினர்கள் குறித்த இருவரையும் கடுமையாகத்தாகியதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.






