ரயில் பாதையில் நடப்பதால் மாதாந்தம் 30 பேர் மரணம்!!

489

ரயில் பாதையில் நடந்து செல்வதனால் ஒரு மாதத்தில் 30 பேர் உயிரிழப்பதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

வருடத்துக்கு இந்த எண்ணிக்கை 360ற்கும் அதிகமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், ரயில் பாதைகளில் நடந்து செல்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த பாதையில் நடந்து செல்வோர் பிடிக்கப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.