நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான அம்பிகைபாலன் ஜெகதீஸ்வரி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளாா்.
தற்கொலை செய்யும் முன் அவர் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், கணவன் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும், அவர் திரும்பி வரவில்லை எனவும் தனது காணியை விற்று தான் பெற்ற கடன்களை செலுத்துமாறும், தனது இறுதி கிரிகைகள் முடிந்ததும் பிள்ளைகளை சிறுவர் விடுதியில் சேர்த்துவடுமாறும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணவனால் கைவிடப்பட்டுள்ள குறித்த பெண்ணுக்கு 12 மற்றும் 3 வயதில் பெண் பிள்ளைகளும், எட்டு வயதில் ஒரு மகனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புதுகுடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.