வருட ஆரம்பத்தில் வானில் ஏற்படவுள்ள முதல் மாற்றம் : இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!

282

விண்கற்கள் பொழிவை இலங்கையர்கள் இன்றிரவு 8 மணிமுதல் 9 மணிவரையும், நாளை அதிகாலை 4 மணியளவிலும் அவதானிக்க முடியுமென இலங்கை கோள்மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை காலை 4 மணிமுதல் 5 மணிவரை விண்கற்கல் பொழிவை தெளிவாக அவதானிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணித்தியாலத்திற்கு சராசரியாக 40 விண்கற்கள் விழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கற்கல் மழை ஜனவரி 1ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை பொழியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இதுவே இந்த வருடத்துக்கான முதல் விண்கற்கல் பொழிவாகும். இருப்பினும், விண்கற்கள் பொழிவு ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் திகதிகள், மே 6 மற்றும் 7ஆம் திகதிகள், ஜூலை 28 மற்றும் 29ஆம் திகதிகள், ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் பொழியும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கோள்மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மற்றும் 21, 22 ஆம் திகதிகள், நவம்பர் 17, 18 மற்றும் டிசம்பர் 13, 14 மற்றும் 21, 22 ஆம் திகதிகளில் விண்கற்கள் பொழிவினை அவதானிக்க முடியும் என 2017 ஆண்டுக்கான இலங்கை கோளரங்கம் வானியல் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.