வவுனியா மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்களுக்கே நெற்களஞ்சியசாலை நெல்லை வழங்க வேண்டும் : ப.சத்தியலிங்கம்!!

696

வவுனியா மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்களுக்கே வவுனியா நெற் களஞ்சிய சாலையில் உள்ள நெல்லை வழங்க வேண்டும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வவுனியா அரசாங்க அதிபருக்கு தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள நெற் களஞ்சியசாலையில் உள்ள நெல்லை எடுத்துச்செல்ல தென்பகுதியில் இருந்து பாரஊர்திகள் வவுனியாவிற்கு வருகை தந்திருந்த நிலையில் வவுனியா மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இந் நிலையிலேயே வடமாகாண சுகாதார அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் ஹரிசன் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியிருந்த நிலையில் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 8 அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு மாத்திரம் நெல்லை வழங்க அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இந் நிலையில் வவுனியா மாவட்டத்தில் அரிசி ஆலைகளில் பணியாற்றுபவர்களின் தொழில்வாய்ப்பு உட்பட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி வவுனியாவில் உள்ள அரிசி ஆலைகளுக்கு நெல்லினை வழங்க நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் நெற்களஞ்சியசாலையை முற்றுகையிட்ட மக்கள்!!