18 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்!!

550

வியட்நாமில் ஒருவரது வயிற்றில் 18 ஆண்டுகளாக இருந்த கத்திரிக்கோல் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த மா வேன்நாட். என்ற 54 வயதுடைவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கடந்த 1998ஆம் ஆண்டு நேர்ந்த விபத்தின் போது இவரை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வைத்தியர்கள் அறுவை சிகிச்சை செய்தபோது தவறுதாலாக அவரது வயிற்றில் கத்தரிக்கோலை வைத்துத் தைத்துவிட்டனர் என குறிப்பிடப்படுகின்றது.