கொழும்பு நகரில் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள சீன வாகனங்கள்!!

342

கொழும்பு வீதிகளில் பயணிக்கும் சீனாவுக்கு சொந்தமான வாகனங்களினால் ஆபத்து உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கொழும்பு துறைமுக நகரத்தை நிர்மாணிப்பதற்கு அவசியமான பொருட்கள் கொண்டு செல்லும் பெரிய அளவிலான டிப்பர் வாகனங்களால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த வாகனங்கள் முறையாக போக்குவரத்து அனுமதி பத்திரம் இன்றி பிரதான வீதிகளில் பயணிப்பதாக தெரிய வந்துள்ளது.இந்த வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இலங்கையில் பயண நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தில் அனுமதி பத்திரமேனும் பெற்றுக் கொள்ளப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் குறித்த டிப்பர் வாகனங்கள் எவ்வித காப்புறுதி நிறுவனத்தின் கீழும் பதிவாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.சைனா ஹாபர் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த வாகனங்கள் பிரதான வீதிகளில் பயணிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் இதன் ஊடாக வீதிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் ஆபத்தான நிலையென அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.