நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையம் 8 மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளது!!

243

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுபாதை புனரமைப்புப் பணிகள் காரணமாக நாளை(06.01.2017) முதல் கட்டுநாயக்க விமான நிலையம் தினமும் 8 மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளது.

காலை 8 மணித்தொடக்கம் மாலை 4 மணி வரையான 8 மணித்தியாலங்கள் மூடப்பட்டிருக்கும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் 5 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விமான ஓடுபாதை புனரமைப்பு பணிகளுக்கு 5 மில்லியன் டொலர் செலவாகுவதாக அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

அத்தோடு நெதர்லாந்து அரசின் கண்காணிப்பின் கீழ் சீன நிறுவனம் ஒன்று இதன் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க கூறியுள்ளார்.

இந்த புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற விமான ஓடுப்பாதை 3,335 நீளமும் 45 மீற்றர் அகலமும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை தொடக்கம் 4 மாதங்களுக்கு இவ்வாறு விமான நிலையம் 8 மணித்தியாலங்கள் மூடப்பட்டிருக்கும் என என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.