பிரேசில் கடற்கரை ஒன்றில் மாலை நேரம் காற்று வாங்க சென்ற இளம்பெண் ஒருவர் பின்னல் தாக்கி படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் சாவோ பாலோ மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல கடற்கரை ஒன்றில் குறித்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தின் போது மாலை வேளையில் குறித்த இளம்பெண் கடற்கரை ஓரம் காலார நடக்க வேண்டும் என எண்ணி சென்றுள்ளார்.
வானிலை மிக மோசமாக இருந்துள்ள நிலையில் அடிக்கடி மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதுமாக இருந்துள்ளது.
இருப்பினும் குறித்த இளம்பெண் கடற்கரையில் நடந்து நின்றுள்ளார். அவர் நின்றிருந்த பகுதியின் அருகாமையில் வேறு சிலரும் கடற்கரை காற்றை ரசித்தபடி நின்றிருந்தனர்.
இந்த நிலையில் திடீரென்று முளைத்த மின்னல் ஒன்று 25 வயதேயான அந்த இளம்பெண் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. இதனால் சுருண்டு விழுந்த அந்த பெண்ணுக்கு உடலெங்கும் பல இடங்களில் கருகியுள்ளது.
மட்டுமின்றி மின்னல் தாக்கிய அந்த நொடியிலேயே அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக சுற்றும் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மின்னல் நேரடியாக ஒருவர் மீது தாக்குவது அரிதிலும் அரிது. ஆனால் எதிர்மறையாக தாக்கும் வாய்ப்புகள் அதிகம். மின்னல் தாக்கும் போது பொதுவெளியில் தனியாக நின்றால், மரங்களின் அருகாமையில் நின்றால் என குறிப்பிட்ட காரணிகளால் மட்டுமே மின்னல் தாக்கி பாதிப்பு ஏற்படும் எனறு அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.






