அனைவரது கவனத்தையும் ஈர்த்த சுற்றுலாப் பயணி!!

500

இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள டென்மார்க் பிரஜை ஒருவர், இம்முறை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

72 வயதுடைய டென்மார்க் பிரஜையான சென்டர் ஜேசன், அந்த நாட்டில் கணக்காய்வாளராக பணியாற்றி, தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

இலங்கை மீது அதிக ஈர்ப்பு கொண்ட இவர், அடிக்கடி சுற்றுலா நிமித்தம் நாட்டுக்கு வருகை தருவது வழக்கம்.

இந்தநிலையில் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் காரணம், இது அவரது இலங்கைக்கான 50வது பயணம் என்பதே.

1974ம் ஆண்டு முதல் முறையாக சென்டர் ஜேசன் இலங்கை வந்ததோடு, அதன் பின்னர் 1977ம் ஆண்டு இரண்டாவது முறையாக மீண்டும் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.