தன்னுடைய 13 வயது மகளை பக்கத்து வீட்டாருக்கு கொடுத்து விட்டு அவரது சகோதரியை நபரொருவர் இரண்டாவது திருமணம் செய்த சம்பவமொன்று பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
இரண்டாவது மனைவியுடன் வசீர் அஹமது
பாகிஸ்தானில் ஜம்பூர் எனும் ஊரில் வசிப்பவர் வசீர் அஹமது(36). இவர் தன்னுடைய 13 வயது மகளை, தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் முஹமது ரம்ஜான் (36) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
ஏதோ பண்டமாற்றம் போல் அவர்கள் இருவரும், தங்கள் வீட்டு பெண்களை மாற்றிக் கொண்ட விவகாரம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் முஹமது ரம்ஜானுக்கு காது கேட்காது மற்றும் வாய் பேச முடியாது. ஆனாலும், அவருக்கு தன்னுடைய மகளை கொடுத்துள்ளார் வசீம்.
இந்த விவகாரம் பொலிஸாருக்கு தெரிய வரவே வசீர் மற்றும் ரம்ஜானை அழைத்து சென்று விசாரணை செய்ததோடு, 16 வயதிற்குட்பட்ட பெண்ணை திருமணம் செய்ததற்காக இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
ஆனால், அந்த பெண் தனக்கு 16 வயது ஆகிவிட்டது என நீதிமன்றத்தில் நிரூபித்ததையடுத்து அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். எங்கள் வீட்டுப் பெண்களை மாற்றிக் கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.
முதல், இரண்டாவது மனைவிமார் மற்றும் பிள்ளைகளுடன் வசீர் அஹமது