மரண ஊர்வலத்தில் கலந்துகொண்ட 26 பேர் உடல்சிதறி பலி!!

435

iraq

ஈராக்கில் பிரிவினைவாத மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த சில மாதங்களாக நடந்துவரும் இந்த தீவிரவாத தாக்குதல்களில் இருதரப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் மொசூல் நகர் அருகே துருக்கி எல்லையோரமுள்ள பாஷிகா நகரில் நடந்த ஷியா இஸ்லாமை பின்பற்றும் ஷபாகி பிரிவை சேர்ந்த ஒருவரின் மரண ஊர்வலத்தின் போது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஊர்வலத்தில் சென்றவர்களில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். மற்ற 46 பேர் படுகாயமடைந்தனர்.



சிறுபான்மையான இந்த ஷபாகி பிரிவினர் ஈராக்கில் அதிகபட்சமாக ஒரு இலட்சம் பேர் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை குறிவைத்து அல்கொய்தாவுடன் தொடர்புடைய சன்னி ஆயுதம் ஏந்திய குழுக்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது.