விண்வெளி ஆய்வு நிலையத்துக்குச் செல்லும் முதல் கறுப்பினப் பெண்!!

264

உலக வரலாற்றில் முதன்முறையாக, கறுப்பினப் பெண் ஒருவரை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்ப நாஸா திட்டமிட்டுள்ளது.

நாஸாவின் விண்வெளி வீரர்களுக்கான பாடத் திட்டத்தின் 20வது வகுப்பில், கடந்த 2009ஆம் ஆண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டவர் ஜெனட் எப்ஸ். இவர் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையின் தொழில்நுட்ப வல்லுனராகப் பணிபுரிந்தவர்.

இவர் அடுத்த ஆண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு, பிரபல விண்வெளி ஆய்வாளரான அன்ட்ரூ ஃபியுஸ்டல்லின் உதவியாளராகச் செல்லவுள்ளார்.

“சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் ஒவ்வொருவரும் புதிதாக ஏதோவொரு விடயத்தைக் கண்டுபிடித்துவிடுகின்றனர். அந்த வகையில் ஜெனட்டும் நிச்சயமாக புதிய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரி ஆவார்” என்று நாஸா அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார்.

இதுவரை காலமும் அமெரிக்க-ஆப்பிரிக்கர்கள் சிலர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருக்கின்ற போதிலும், விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணியாற்றப் போகும் முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையை ஜெனட் பெறவிருக்கிறார்.