தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா துபாயில் நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டார்கள். இதில்‘3 படத்தில் வைதிஸ் கொலை வெறி பாடலை பாடிய தனுசுக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான விருது வழங்கப்பட்டது.
நடிகை திரிஷா 10 வருடங்கள் கதாநாயகியாக நடித்து வந்ததற்கான சாதனையாளர் விருது பெற்றார். சிறந்த அறிமுக நடிகர் விருது கும்கியில் நடித்த விக்ரம் பிரபுவுக்கும், சிறந்த அறிமுக நடிகை விருது சுந்தர பாண்டியன் படத்தில் நடித்த லட்சுமி மேனனுக்கும் கிடைத்தன.
சிறந்த அறிமுக இயக்குனர் விருதை பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் பெற்றார். தென் இந்திய சினிமாவில் இளைஞர்களை கவர்ந்த நடிகைக்கான விருதை காஜல் அகர்வால் பெற்றார். நித்யா மேனனுக்கு தென்னிந்திய சினிமாவில் வளரும் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.
சிறந்த ஸ்டைல் நடிகைக்கான விருதை சுருதிஹாசன் பெற்றார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலினுக்கும் விருது வழங்கப்பட்டது. துப்பாக்கி படத்தில் இசையமைத்த ஹரீஸ் ஜெயராஜ் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றார்.
கும்கி படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது பெற்றார். அரவானன் படத்தில் நிலா நிலா பாடலுக்கு நடனம் அமைத்த காயத்திரி ரகுராம் சிறந்த டான்ஸ் மாஸ்டர் விருது பெற்றார்.
துப்பாக்கி படத்தில் சிறந்த சண்டைக் காட்சிகளை அமைத்தற்கான ஸ்டண்ட் மாஸ்டர் கிச்சா விருது பெற்றார். இது போல் பிறமொழி படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.