தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு காதல் ஜோடி!!

578

கனடாவை சேர்ந்த பிலிப்- பாராஹா ஜோடி தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கனடாவை சேர்ந்தவர்கள் பிலிப்- பாராஹா, கடந்த 15 ஆண்டுகளாக நண்பர்களாக பழகியவர்கள் இடையே காதல் மலர்ந்தது.

இந்நிலையில் இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் வந்த போது, தமிழ் முறைப்படி திருமணம் நடந்ததை பார்த்துள்ளனர்.

தமிழ் கலாச்சாரத்தால் ஈர்க்கப்படவே, திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

இதன்படி திருவண்ணாமலையில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் நண்பர்களின் புடைசூழ நேற்று திருமணம் வெகு விமர்சையாக நடந்தது.

இதுகுறித்து மணமகள் பாராஹா கூறியதாவது, தமிழ்நாட்டில் நடந்த திருமண சடங்குகளைப் பார்த்து வியந்து போனேன். எனக்கும் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.

சுற்றலா சென்றதால் உரிய திருமண வயதை நாங்கள் கடந்து விட்டோம். எனினும் இருக்கிற காலத்திலாவது தம்பதியாக வாழ்வோம் என முடிவு செய்து எனது ஆசையை பிலிபிடம் தெரிவித்தேன்.

அவரும் சம்மதம் தெரிவித்ததால், எங்களது திருமணம் தமிழ் கலாச்சாரப்படி இனிதாக நிறைவேறியது, இந்த தருணம் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத தருணம் என்று தெரிவித்துள்ளார்.