இதயத்துடிப்பின் அதிர்வால் கணணியை இயக்கும் கைப்பட்டி!!

513

hand

இதயத் துடிப்பு மற்றும் நாடித் துடிப்பின் அதிர்வால் கையடக்க தொலைபேசி மற்றும் கணணியை இயக்கும் கருவி கனடாவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

ஒவ்வொரு மனிதனின் கைவிரல் ரேகைகள் போன்று இதயத் துடிப்பின் வேகம் மற்றும் அதிர்வுகள் வேறுபட்டவை. மணிக்கட்டில் கட்டும் கைப்பட்டை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இக்கருவி “நைமி ரிஸ்ட் பேண்ட்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் இதயத் துடிப்பின் அதிர்வை அறிய வோல்ட் மீட்டர் மற்றும் ஹொட் ஐடி பொருத்தப்பட்டுள்ளது. கனடாவின் பயோனிம் நிறுவனம் இக்கருவியின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.



இதைக் கொண்டு காரைத் திறப்பது ஒன்லைன் சொப்பிங்கில் பணம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்ய முடியும். இக்கருவியால், கையடக்க தொலைபேசி, கணணி மற்றும் பிற இலத்திரனியல் கருவிகளின் கடவுச் சொற்கள் ஆகவும் பயன்படுத்தலாம்.

இதை அணிந்திருப்பவர், கையடக்க தொலைபேசி, கணணி, மடிக் கணணி அருகில் சென்றால், அவை தானாக இயங்க ஆரம்பிக்கும். ஸ்மாட் டிவியை இயக்கவும், நிறுத்தவும் முடியும்.