‘நீ உருப்பட மாட்டாய்’ என்றாா் அதிபா் : கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் இடம் பெற்ற மாணவன்!!

849

தனது பாடசாலை அதிபரின் கண்டிப்பான வார்த்தைகளே தனக்கு கற்க வேண்டும் என்ற சவாலை ஏற்படுத்தியதாக உயிரியல் தொழிநுட்ப பிரிவில் கிளிநொச்சி மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்ற கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் தெரிவித்துள்ளார்.

இவா் கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு எனும் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்தவா். இவர் ஒரு கூலித் தொழிலாளியின் புதல்வராவார்.

ஊடகவியலாளரிடம் செவ்வியளித்த போது, ஆரம்ப கல்வி கற்ற பாடசாலையில் எள்ளுகாட்டில் இருந்து செல்பவா்களை ஏளனமாகவே பார்ப்பது வழமை. எள்ளுக்காட்டில் உள்ளவா்கள் படிக்கத் தெரியாதவா்கள் என்றெல்லாம் கூறுவார்கள்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு உயிரியல் தொழிநுட்ப பிரிவில் உயா்தரம் கற்பதற்காக இந்துக் கல்லூரிக்கு செல்வதற்காக புறப்பட்ட போது அதிபா் ஏளனமும் கண்டிப்பும் நிறைந்த வார்த்தைகளையே கூறி அனுப்பி வைத்தார்.

அதுவே எனக்கு சவாலக அமைந்தது. ஆனாலும் அந்த வார்த்தைகள் தனக்கு இன்னமும் அழுத்தத்தை கொடுப்பதாக கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பின்தங்கிய பிரதேச மாணவர்களை ஏளனமாக பார்ப்பதை அனைவரும் கைவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.