காரை திருடியதாக பெண் மீது புகார் : வழங்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா?

643

பொலிவியா நாட்டில் காரை திருடியதாக பெண் ஒருவர் மீது தவறாக குற்றம் சுமத்தி அவரை கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொலிவியா நாட்டை சேர்ந்த 52 வயதான தாயார் ஒருவர் 22 மற்றும் 28 வயதான பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். குடும்பம் வறுமையில் வாடியதாலும், கடன் அதிகமாக உள்ளதால் Caranavi என்ற நகருக்கு குடியேறியுள்ளனர்.

இந்நிலையில், நகருக்குள் அடிக்கடி கார்கள் திருடுபோயுள்ளது. இடம்பெயர்ந்து வந்துள்ள இக்குடும்பத்தினர் தான் திருட்டிற்கு காரணம் எனக் கூறி மூவரையும் ஒரே மரத்தில் கட்டிப்போட்டுள்ளனர். பின்னர், மரத்தின் மீது விஷத்தன்மை வாய்ந்த எறும்புகளை விட்டு மூவரையும் கடிக்க வைத்துள்ளனர்.

இவ்விவகாரம் காவல் துறைக்கு தெரியவந்ததும், உடனடியாக சென்று மூவரையும் மீட்டுள்ளனர். ஆனால், தாயாரின் தொண்டனை பகுதியை எறும்புகள் கடித்து குதறியுள்ளதால் அவரால் மூச்சு விடமுடியவில்லை.

தாயார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், துரதிஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார்.

இரண்டு பிள்ளைகளும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இவ்விவகாரத்தில் மூவரையும் மரத்தில் கட்டிப்போட்ட நபர்களில் ஒருவரை மட்டும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

நகரில் உண்மையாக கார்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

காரை திருடியதாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.