மோகன்லாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு : ஜில்லா படப்பிடிப்பு நிறுத்தம்!!

609

jilla

தலைவா சர்ச்சைகளைத் தாண்டி விஜய் தற்போது ஜில்லா படத்தில் ஜாலி மூடில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரவி மரியா பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடத்த முடிவெடுத்தனர். இங்கு மோகன்லாலும் ரவி மரியாவும் மோதும் காட்சியை படமாக்க திட்டமிட்டிருந்தார்கள்.

இந்நிலையில் மோகன்லாலுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் இப்படப்பிடிப்பை சற்று தள்ளி வைத்துள்ளனர். அவர் குணமாகி வந்ததும் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஆனால, இயக்குனரோ கிடைத்த கால்ஷீட்டுகளை சும்மா விடக்கூடாது என்பதற்காக இந்த நேரத்தில் சென்னையில் விஜய் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம். இதற்காக சென்னையில் முகாமிட்டு இதற்கான பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளாராம்.