நைஜிரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்களினால் கடத்தப்பட்ட பாடசாலை மாணவிகள் 1000 நாட்கள் ஆகியும் இன்னும் விடுதலை செய்யப்படாத நிலை நீடித்து வருகிறது.
கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜீரிய பாடசாலையில் படிக்கும் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்திச் செல்லப்பட்டனர்.
கடத்தலுக்கு பின்னர் மூன்று ஆண்டுகளில் 21 மாணவிகள் மட்டும் இதுவரை விடுதலை செய்யப்பட்டனர். அதில் பலர் கற்பமாக இருந்தனர்.
கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க நைஜிரிய அரசு உலக நாடுகளின் உதவியோடு தீவிர முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில், போகோ ஹராம் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட மாணவிகள் 1000 நாட்கள் ஆகியும் இன்னும் விடுதலை செய்யப்படாத அவலம் நீடித்து வருகிறது.
கிளர்ச்சியாளர்களின் பிடியில் மீதமுள்ள 195 பாடசாலை மாணவிகளை விரைவில் மீட்போம் போம் என நைஜீரிய ஜனாதிபதி முகம்மது புகாரி நம்பிக்கை தெரிவித்தார்.






