சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதவாது..
உலகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. 2015ம் ஆண்டுக்குள் குழந்தைகள் இறப்பு விகிதத்தை 3ல் 2 பங்காக குறைத்து இலக்கு நிர்னயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த இலக்கை எட்டமுடியாத நிலையில் உள்ளது. யுனிசெப் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கடந்த 20 ஆண்டில் 9 கோடி குழந்தைகள் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.
1990ம் ஆண்டு குழந்தைகள் இறப்பு விகிதம் 1 கோடியே 26 லட்சமாக இருந்தது. தற்போது அது 66 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வந்தாலும் அடுத்த 25 ஆண்டுகளில் 3 1/2 கோடி குழந்தைகள் பலியாவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சுகாதார சீர்கேடு, போதிய ஊட்டச்சத்தின்மை போன்ற காரணங்களால் இந்த உயிரிழப்பு ஏற்படும். கிழக்கு ஆசியா மற்றும் ஆசிய பகுதிகளில் குழந்தைகள் இறப்பு அதிக அளவில் குறைந்துள்ளது. ஆனால் மத்திய ஆபிரிக்கா, மேற்கு ஆபிரிக்கா பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு குழந்தைகள் இறப்பை கட்டப்படுத்த முடியவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.