பிரேசில் சிறையில் கைதிகளிடையே மீண்டும் மோதல் : 10 பேர் உயிரிழப்பு, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலங்கள்!!

541

பிரேசிலில் உள்ள அல்காகஷ் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் நேற்று முன்தினம் (14.01) இடம்பெற்ற மோதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கைதிகள் இரு தரப்பினர் வெடி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் பரஸ்பர தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். 14 மணித்தியால போராட்டத்தின் பின்னர் பொலிஸார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானோரின் தலைகள் துண்டிக்கப்பட்டுக் கிடந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைதிகள் எவரும் சிறையிலிருந்து தப்பிக்கவில்லை எனவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பிரேசில் சிறையில் கைதிகளுக்கிடையே இடம்பெறும் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாண்டில் இடம்பெற்ற மூன்றாவது மோதலாக இது பதிவாகியுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற மோதல்களின் போது சுமார் 100 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.