அமெரிக்காவின் ஹவாய் தீவை சேர்ந்தவர் ஜானய்ஸ் லொகேலானி. உண்மையில் இவருடைய பெயர் கீஹானய்குகவாகாஹிஹூலி. என்று மிக நீளமானது. இவருடைய பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் மொத்தம் 35 எழுத்துகள் உள்ளன.
இவருடைய பெயரை உச்சரிப்பதே மிகவும் கடினம். மேஜரானதும் டிரைவிங் லைசன்ஸ் பெறும் போதுதான் சிக்கல் தலைதூக்கியது. அவருடைய அடையாள அட்டையில் உள்ள பெயரில் சில எழுத்துகளை விட்டுவிட்டு கொடுத்தனர். இதனால் போகும் இடங்களில் எல்லாம் பிரச்னையை சந்தித்தார். அடையாள அட்டை போலியா, பெண் தீவிரவாதியா என்று அதிகாரிகள் கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.
இதுகுறித்து தொலைக்காட்சியில் பேட்டி அளித்த ஜானய்ஸ் கடந்த வாரம் போக்குவரத்தில் சிக்கிக் கொண்ட போது போக்குவரத்து காவல் அதிகாரி மிகவும் மரியாதை குறைவாக நடந்து கொண்டார். இதனால் மன உளைச்சல் அடைந்தேன். இதுபோன்ற சம்பவங்களால் கடந்த 20 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறேன் என்று கூறினார். ஹவாய் தீவில் பாரம்பரியமாக வசிக்கும் மக்கள் நீளமான பெயர்களை வைத்து கொள்வது வழக்கம்.
தற்போது இவரது பெயரோடு கணவனின் பெயரும் சேர்ந்து விடுவதால் 40 எழுத்துகள் வரை வருகின்றன. தங்களது பெயரில் ஒரு எழுத்து விடுபட்டால் கூட கௌரவ குறைச்சலாக ஹவாய் தீவினர் நினைக்கின்றனர் என்று பத்திரிகைகள் பரபரப்பாக செய்தி வெளியிட்டன.
இதையடுத்து ஹவாய் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஜானய்சின் டிரைவிங் லைசன்சில் முழு பெயரும் இடம்பெறும் வகையில் மாற்றித் தர ஒப்புக் கொண்டுள்ளனர். புதிய அடையாள அட்டையை எதிர்பார்த்து காத்திருக்கிறார் கீஹானய்குகவாகாஹிஹூலி..