தேர்தல் வன்முறைகள் அதிகரிக்கக் கூடும் : கபே அச்சம்!!

464

site-logo

தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் வன்முறைகள் மேலும் அதிகரிக்கக் கூடிய அபாயம் இருப்பதாக கபே இயக்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.

வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வருவதாக கபே இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போலி இலக்க தகடுகள் அடங்கிய வாகனங்கள் மற்றும் கராஜ் இலக்கங்கள் கொண்ட வாகனங்களின் பாவனை அதிகரித்துளள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கண்டில் நேற்று இரவு ஐதேக வேட்பாளர் வராவெவவின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டு வடமேல் மாகாணத்தில் வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் சனத் நிஷாந்த மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போலி இலக்க தகடுகள் அடங்கிய வாகனங்களை பயன்படுத்தி வருவதாக கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர்கள் தேர்தல் சட்டத்தையும் சிவில் சட்டத்தையும் மீறி வருகின்றனர். இதனை தடுக்க தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீர்த்தி தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளார்.