குண்டு மனிதர்களுக்கு ஒற்றை தலைவலி அதிகம் : விஞ்ஞானிகள்!!

564

fat

உடல் பருமன் உள்ளவர்களுக்கு மைக்ரேன் எனும் ஒற்றை தலைவலிவரும் அபாயம் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள ஜோன்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைவலி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அதிக உடல்எடை கொண்டவர்களுக்கு அடிக்கடி அல்லது எப்போதாவது ஒற்றை தலைவலி வரும் ஆபத்துள்ளது. சாதாரணமானவர்களை விட குண்டாக உள்ளவர்களுக்கு, தலைவலி வரும் வாய்ப்பு 81 சதவீதம் அதிகமாக உள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.