நேர்த்திக் கடன் செலுத்தச் சென்ற சிறுவன் சுனையில் வீழ்ந்து மரணம்!!

624

நேர்த்­திக்­கடன் செலுத்­து­வ­தற்கு குடும்­பத்­தி­ன­ருடன் சென்ற சிறுவன் ஒருவன் உகந்­த­மலை மலையிலுள்ள சுனையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மட்டு.கோட்டைக் கல்­லாற்றைச் சேர்ந்த ரவி அபிலாஸ் என்ற 11வயது சிறு­வனே உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

இந்த மாண­வன் கடந்த வருடம் தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் 171 புள்­ளி­யைப்­பெற்று சிறப்புச் சித்­தியைப் பெற்­றி­ருந்தார் என்­பது குறிப்­பி­ட­த்தக்­கது.

நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை பொத்­து­வி­லை­ய­டுத்­துள்ள உகந்­த­மலை முருகன் ஆல­யத்­துக்கு தனியார் பஸ்ஸில் குடும்­பத்­தா­ருடன் உகந்­த­மலை சென்­றுள்­ளனர்.

அங்கு மலை­மே­லுள்ள கோவி­லுக்கு நேர்த்தி செலுத்தச் சென்றபோது அரு­கி­லுள்ள நீர்­நி­ரம்­பிய சுனைக்குள் தவறி வீழ்நதே இந்தச் சிறுவன் உயி­ரி­ழந்­துள்ளான். இவ­ரது தந்தை ஒரு பொலிஸ் அதிகாரியாவார்.  சடலம் பொத்­துவில் வைத்­தி­ய­சா­லைக்குக் கொண்­டு­செல்­லப்­பட்­டுள்­ளது.

இந்தச் சிறுவன் அரு­கி­லுள்ள பெரிய சுனையில் தவறி வீழ்ந்­த­தனைக் கண்­ணுற்று அவ­ரைக் ­காப்­பாற்ற ஒரு பெண்ணும் ஆணும் சுனைக்குள் பாய்ந்­தனர். சிங்­க­ள­வ­ரான ஒரு பெண் பக்­தரே ஆற்றில் பாயந்­துள்ளார்.

இந்த நிலையில் அவர்­களும் நீருக்குள் பாய்ந்து தத்­த­ளித்துக் கொண்­டி­ருந்த போது அவர்­களைக் காப்­பாற்ற மேலும் இரு பாண்­டி­ருப்பு இளை­ஞர்கள் பாய்ந்து இரு­வரைக் காப்­பாற்­றினார்.

இந்த நிலையில் சிறு­வனை அவர்­களால் மீட்க முடி­யாத நிலையில் அரு­கி­லுள்ள கடற்­ப­டையின், இராணு­வத்­தினர் வர­வ­ழைக்­கப்­பட்டு அவர்கள் சுழி­யோட்டித் தேடி­ய­போது அரை­மணி நேரத்தின் பின்னர் சிறுவன் மீட்­கப்­பட்டான்.

பின்னர் பாணமை பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து அங்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.  நேற்று திங்கட் கிழமை பிரேத பரிசோதனை நடாத்தப் பட்டு சடலம் உறவினரிடம் கையளிக் கப்பட ஏற்பாடாகியிருந்தது.