ஈழத்து இளம் கலைஞன் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் உருவாகி வெளிவரக் காத்திருக்கும் குறுந்திரைப்படமே “இருள்”.
மொறட்டுவைப் பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவன் பூபாலசிங்கம் கேசவனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் என்பவற்றுடன் எஸ்.ஜதுர்ஷன் மற்றும் ஜே.தர்சன் ஜெயகணேஷ் நடிப்பிலும் தயாராகி வரும் இக் குறுந்திரைப்படத்துக்கு மு.கதிர்காமத்தம்பி ஒளிப்பதிவாளராக கடமையாற்றியுள்ளதுடன் ஜெறோன் இசையமைத்துள்ளார்.
சிறகுகள் கிறியேஷன் தயாரிப்பில் ஷியா விஷன் ஸ்ரூடியோ வழங்கும் இக்குறுந்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி தைப்பொங்கல் தினத்தன்று இணையத்தில் வெளியிடப்பட்டு அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
Siragukal Creation
Siya Vision Studio
Cast-S.Jathurshan , J.Tharshan Jeyaganesh
Cinematography- M.Kathirgamaththamby
Music-A j Jeron
Written & Directed – Poobalasingam Kesavan